COURTESY: http://tamil.oneindia.in/news/2013/03/18/tamilnadu-tamil-refugees-observe-fast-171733.html
Published: Monday, March 18, 2013, 12:23 [IST]
சென்னை மயிலாப்பூரில் நேற்று பொதும்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு தடியடி
வாங்கினர். காஞ்சிபுரம் மாவட்டம் ஆனூரில் பொதுமக்கள் 1000 பேர் உண்ணாவிரதம்
இருந்தார்கள் தேனி மாவட்டம் கம்பத்தில் திராட்சைத் தோட்டத் தொழிலாளர்களும்
பேரணியும் உண்ணாவிரதமும் இருந்தனர்.
தமிழ்நாடு லாரி சம்மேளன ஊழியர்கள்
தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் 3 பர்மா தமிழர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத்
தொடங்கியுள்ளனர்.
தமிழீழம் கோரி திருவண்ணாமலை, நாமக்கல், பவானி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில்
ஆயிரக்கணக்கான ஈழ அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
அரியலூரை
அடுத்த செந்துறையில் வாகன ஓட்டுநர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்
நடத்தினர்.
உருத்திரகுமாரன் உரை
இதனிடையே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஊடக
மாநாடு இன்று தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பில் இணையவழி காணொளியூடாக
வி.உருத்திரகுமாரன் உரையாற்றுகிறார்.
No comments:
Post a Comment