Anti-Tamil cat's-paw might be totally distorting, but the peaceful Student Protests truly proved it's success on the following aspects..
1) TN Students, People & Govt showed their love, affection & dedication on SL Tamils..
2) World Tamils uniting on one point supporting each other, Anti-Tamil clowns realising support for SL Tamils prevailing in TN..
3) TN Govt appriciated this rise of Students & Common people of TN in this issue.. strong resolutions been passed on TN State Assembly supporting SL Tamils..
4) Central is given a clear message of SL Tamils goodwill not been taken care of properly the way it should have been..
5) Widespread through out the state with out any interference of Political parties.. showcasing TN Youth power!
6) Overall it's a win-win story for all SL Tamils, TN Students, Common people and the Govt and strong positive message delivered!
7) Opportunity for true Tamil people to unite together..
இலங்கைத்
தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப்பேரவையில்
முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய
முதலமைச்சர்: இலங்கையில் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட
வேண்டு. அதற்கு இந்தியா ஐ.நா, பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர
வேண்டும் என்றார்.மேலும் இலங்கை நட்பு நாடு என்ற வாதத்தை இந்தியா கைவிட
வேண்டும் என்றும் கூறினார். இலங்கைத் தமிழர்களுக்கு சமநீதி கிடைக்க தமிழக
அரசு முயற்சி செய்து வருகிறது என தெரிவித்தார்.
முதல்வர் வேண்டுகோள்:
இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும்,
கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கவனம் செலுத்தும் வகையில் போராட்டத்தை
கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
மாணவர் அறப்போராட்டங்கள் குறித்து நடிகர் கமலஹாசனின் கருத்து..
COURTESY: REDPIX Team
நன்றி: சுப. உதயகுமாரன்
புரட்சியைத் தொடங்குவது எளிது, ஆனால் தொடர்வது கடினம். ஒரு பெரும்
புயலுக்கு நடுவே, ஒரு சின்ன அகல் விளக்கை அணையாமல் எடுத்துச் செல்லும்
வித்தை போன்றது அது. அசாத்தியமானதல்ல என்றாலும் அசாதாரணமான சுய ஒழுக்கம்,
கட்டுப்பாடு அதிகம் தேவைப்படுகிறது.
களத்தில் நிற்கும்
கல்லூரிகள், மாணவர்கள் அனைவரும் அவரவர் கல்லூரியில் அனைத்துத் தரப்பு
மாணவ-மாணவியரை உள்ளடக்கிய 10 பேர் ஒருங்கிணைப்புக் குழுவை உடனடியாக
ஏற்படுத்தியாக வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைவருமாக சேர்ந்து ஒரு மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்துவதும் மிகவும் இன்றியமையாதது. பிற மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுக்களுடனும் தொடர்பு ஏற்படுத்திப் பேசிக்கொண்டிருப்பது,
தகவல் பரிமாறிக் கொள்வது மிக அவசியம்.
போராட்டத்தை ஃபேஸ் புக்
புரட்சியாக மாற்றி விடாமல், சிறு துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள்,
ஒட்டுப்படம் (sticker) போன்றவற்றை அச்சடித்து, உங்கள் பகுதியில் வீடு வீடாக
சென்று விநியோகித்து, மக்களை சந்தித்துப் பேசி, உங்களுக்குத் தேவையான
பொருளுதவியையும் கேட்டுப் பெறலாம். மக்கள் ஆதரவும், பொருளுதவியும்
ஒருங்கேக் கிடைக்க இது ஒன்றே வழி.
கல்லூரி நிர்வாகத்தினர்,
காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள் போன்றோரிடம் உறுதியாக ஆனால்
மரியாதையாகப் பேசுவது நல்லது. அவர்கள் நம்மை வெறுக்கும்படியான மொழி,
உடல்மொழி, கோஷம், அணுகுமுறை, அராஜகம் வேண்டாம். அதுபோல ஊடகங்களை சாதகமாக
பயன்படுத்திக் கொள்வது முக்கியமானது.
கல்லூரி நிர்வாகமோ, மத்திய,
மாநில அரசுகளோ போராட்டங்களை விரும்புவதில்லை, சமூக-பொருளாதார-அரசியல்
ஏற்பாடுகளை மாற்றியமைக்கவும் எளிதில் முன்வருவதில்லை. பொறுமையிழக்காமல்,
உறுதி பிறழாமல், நம்பிக்கையிழக்காமல் தொடர்ந்து முன்னேறுவதுதான் ஒரே வழி.
தொலைநோக்குப் பார்வை, அறிவுபூர்வமான அணுகுமுறை, தொடர்ந்த கருத்துப்
பரிமாற்றம் அவசியம் வேண்டும்.
பெற்றோரின் கடின உழைப்பையும்,
காசையும் பெற்று வாழ்கிற மாணவர்கள் அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.
கூடவே சமூகக் கடமையை ஏற்றுக் கொள்வதால் அதற்காகவும் உழைக்க வேண்டும்.
இரண்டுமே முக்கியமானதால், இரு மடங்கு உழைப்பைக் கொடுக்க வேண்டும். இது
ஒன்றும் கடினமானதல்ல. நேர மேலாண்மை ரகசியம் தெரிந்தால் போதும்.
“படிப்பைப் பார், தேவையற்ற வேலை எதற்கு” என்றெல்லாம் இடித்துரைப்பார்கள்
பலரும். இப்படி நல்லவர் எல்லோருமே ஒதுங்கிப் போனதால்தான் ஓர் அவல
நிலைக்குள் சிக்கிக் கிடக்கிறோம். எங்கள் உலகை நாங்கள் உருவாக்குகிறோம்,
எந்த கல்லூரியும், பேராசிரியரும் கற்றுத்தராத பல அற்புதமான வாழ்க்கைப்
பாடங்களை நாங்கள் பயில்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துங்கள். நாம் வளர நாடு
வாழ்வது அவசியம்.
இருளுக்குள் உழன்று கொண்டிருந்த தமிழினம்
உங்களால் நம்பிக்கைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து அறவழியில் போராடுங்கள்.
ஒற்றுமையாய்ப் போராடுங்கள். ஐம்பது வருடங்களாக தொடர்ந்து
ஏமாற்றப்பட்டிருக்கிற நம் தமிழ் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு உங்களால்
உருவாகட்டும்!
சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
மார்ச் 21, 2013
COURTESY: http://puthiyathalaimurai.tv/students-protest-gains-support-from-all-sections-of-society
பதிவு செய்த நாள் -மார்ச் 19, 2013 at 10:07:02 AM
இலங்கை
விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நடத்தும் போராட்டம் தமிழகத்தில் பூதாகரமாக
வெடித்துள்ளது.மாணவர் போராட்டம் ஒரு புறம் இருக்க, பல்வேறு தரப்பினரும்
போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், போராட்டக் களம் உஷ்ணமாகியிருக்கிறது.
சென்னையில் இன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என தமிழ் ஈழ
விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சவை
போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை இனப்படுகொலை தொடர்பாக
சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கோவை
பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 50 மாணவர்களின் போராட்டம் இன்று
8ஆவது நாளை எட்டியுள்ளது. நெல்லையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும்
மாணவர்களின் போராட்டம் 8ஆவது நாளாக நீடிக்கிறது. தருமபுரி அரசு
கலைக்கல்லூரி விடுதி மாணவர்கள் 5வது நாளாகவும், திருச்சியில் 12 மாணவர்கள்
8வது நாளாகவும் தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதம் தொடரும்
நிலையில், கோவையில் அனைத்து மாணவர்கள் சார்பில் இன்று எழுச்சிப் பேரணி
நடத்த திட்டமிடப்பட்டுளளது.
மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை:
மாணவர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இடையே முற்றுகை
போராட்டங்களும் தொடர்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரல்
தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.
பட்டுக்கோட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தபால் நிலையத்தை
பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்லடம் மற்றும் துறையூரில் தனியார்
கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரியில் கூடலூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட கல்லூரி
மாணவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர். திருவாரூரில் 100க்கும் மேற்பட்ட
மாணவர்கள் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரிகளுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டாலும் தங்கள் போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில்
ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
சினிமா இயக்குனர்கள் இன்று போராட்டம்: மாணவர்கள்
போராட்டம் ஒரு புறம் இருக்க, மாணவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில்பட்டியில் இலங்கை அதிபர்
ராஜபக்ச உருவபொம்மையை மரத்தில் தூக்கிலிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாணவர்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டத்தில் இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
இருந்தனர். இலங்கை விவகாரம் தொடர்பாக திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில்
சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
கடல் கடந்து பெருகும் ஆதரவு: இலங்கையின்
போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குழு விசாரணை நடத்துவதற்கு, ஐ.நா.வில்
ஜப்பான் வலியுறுத்தக் கோரி டோக்கியோவில் வசிக்கும் தமிழர்கள் அந்நாட்டு
வெளியுறவுத்துறையிடம் நேரில் மனு அளித்தனர்.மேலும், அதன் அலுவலகத்திற்கு
அருகே அவர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இலங்கைத்
தமிழர் பிரச்னைக்கு தமிழ் ஈழம் தான் என்றும், இதற்காக பொதுவாக்கெடுப்பு
நடத்த ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
லண்டனில் 3 இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்: தமிழக
மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் 3 இலங்கை
தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.இந்திய தூதரகம்
முன்பாக இந்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழக மாணவர்களின்
போராட்டத்திற்கு வலு சேர்க்கவும், இலங்கை இனப்படுகொலை விஷயத்தில் சர்வதேச
சமூகத்தின் பார்வையை கவரவும் இந்த போராட்டத்தில் இலங்கைத் தமிழர்கள்
ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்
குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழ மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
என்று 3 பேரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு
லண்டனில் உள்ள இலங்கைத் தமிழர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். லண்டனில் உள்ள
ஈழத் தமிழர்களை திரட்டி போராட்டம் நடத்தவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் கடையடைப்பு:
இலங்கையில் நடந்த போரின் போது இனப்படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்சவை
கண்டித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் கடையடைப்பு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்பேட்டில் காய், கனி, மலர் விற்பனை
கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன.