Friday, March 15, 2013

தட்ஸ்தமிழ்: வலுக்கும் மாணவர் போராட்டம்: தமிழகம் முழுவதும் அரசுக் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை

 
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
 இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம், போராட்டம், ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர்.
பல இடங்களில் உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. 
 idc declared govt colleges as students protest
இதனிடையே, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக வரும் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மாணவர்கள் முடிவு செய்திருந்தனர். இதையடுத்து, அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் அறிவிப்பு மூலம் தங்களின் போராட்டத்தை ஒடுக்க முடியாது என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment