Pages

Monday, March 18, 2013

தட்ஸ்தமிழ்: மாணவர் போராட்டம் தீவிரம் - புதுவையிலும் கல்லூரிகளுக்கு விடுமுறை

COURTESY: http://tamil.oneindia.in/news/2013/03/18/tamilnadu-puducherry-colleges-shut-after-students-171737.html

புதுச்சேரி: மாணவர் போராட்டம் தீவிரமடைவதையொட்டி புதுச்சேரியிலும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் ராஜபக்சேவைப் பன்னாட்டுக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றக்கோரியும், இந்திய அரசு அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், புதுவை மாநிலத்தில் உள்ள கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டங்களில் குதித்துள்ளனர். சட்டக் கல்லூரி மாணவர்கள், தாகூர் அரசு கல்லூரி மாணவர்கள், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் இன்று காயக்கட்டுகளுடன் புறப்பட்டு, புதுவையின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றுள்ளனர். போராட்டம் எதிரொலியாக கல்லூரிகளுக்கு அங்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment