Monday, March 18, 2013

தட்ஸ்தமிழ்: தமிழகத்தில் 8-வது நாளாக மாணவர் போராட்டம் நீடிப்பு! தொடர்கிறது உண்ணாவிரதம், சாலை மறியல்!!

COURTESY: http://tamil.oneindia.in/news/2013/03/18/tamilnadu-large-student-protests-tamil-nadu-against-sri-lanka-171740.html
 
சென்னை: தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாக தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் எழுச்சியோடு நீடிக்கிறது

தமிழீழத்துக்கான மாணவர்கள் போராட்டம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்தது. ஆனால் அரசின் விடுமுறை அறிவிப்பையும் மீறி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

மதுரையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 large student protests tamil nadu against sri lanka
கோவையில் சட்டக் கல்லூரி, பாரதியார் பல்கலைக் கழக மாணவர்கள் 8-வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்கள் காயக்கட்டுகளைப் போட்டபடி ஈழத்து அவலத்தை சித்தரிக்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுவை பல்கலைக் கழக வளாகத்தில் 40 மாணவர்கள் 5-வது நாளாக சாகும் வரையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி, சென்னை சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவபொம்மையை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.

ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி பொறியியல் கல்லூரி

திருவாரூர் கலைக்கல்லூரி

புதுக்கோட்டை விராலிமலை கல்லூரி

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்

திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி,

திருவள்ளூர் தனியார் பொறியியல் கல்லூரிகளின் மாணவர்களும் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்துக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காஞ்சிபுரத்தில் 5 கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பெரம்பலூர் தனியார் கல்லூரி மாணவர்கள் 800 பேர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஐடிஐ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

சேலம் பெரியார் பல்கலைக் கழக மாணவர்கள் 20 பேர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில் அனைத்து கல்லூரி மாணவர்களும் இணைந்து திருமலை நாயக்கர் கலை கல்லூரியில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை பேரணி நடத்தினர்.

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 10 பேர் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவதற்காக அங்கிருந்து நடைபயணம் மேற்கொண்டிருக்கின்றனர்.

கோவில்பட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்த 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

திருச்சி பொறியியல் கல்லூரி மாணவர்கள் திருச்சி- மதுரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment